விபசார வழக்கில், பெண்ணை தப்ப வைக்க உதவி: 2 போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் – ஏட்டு பணி இடைநீக்கம்


விபசார வழக்கில், பெண்ணை தப்ப வைக்க உதவி: 2 போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் – ஏட்டு பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 25 Oct 2018 10:41 PM IST)
t-max-icont-min-icon

விபசார வழக்கில் இருந்து பெண்ணை தப்ப வைக்க உதவி செய்ததாக 2 சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு ஏட்டு ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஈரோடு,

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் விபசார வழக்கில் சிக்கிய ஒரு பெண், அந்த வழக்கில் இருந்து தப்பிக்க போலீஸ்காரர் ஒருவருடன் உரையாடிய ஆடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் போலீசில் சிக்காமல் இருக்கவும், வக்கீல்களை தொடர்பு கொண்டு வழக்கில் இருந்து வெளிவருவது தொடர்பாகவும் போலீஸ்காரர் ஒருவர் அந்த பெண்ணிடம் பேசி இருந்தார். இதேபோல் விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணிடம் போலீஸ்காரர் பேசிய மற்றொரு ஆடியோவும் வெளியானது. இந்த 2 ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோவில் உரையாடிய பெண் யார்? அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்ட போலீசார் யார்? என்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

உரையாடல் ஆடியோக்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபசார வழக்கில் இருந்து பெண்ணை தப்ப வைக்க சூரம்பட்டி போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வரதராஜ் (56), ஈரோடு டவுன் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் (57), வீரப்பன்சத்திரம் போலீஸ் ஏட்டு வடிவேல் (52) ஆகியோர் உதவி செய்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் நேற்று உத்தரவிட்டார்.


Next Story