கோவில்பட்டியில் ரூ.10¼ கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்


கோவில்பட்டியில் ரூ.10¼ கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 25 Oct 2018 10:56 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரூ.10¼ கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டியில் ரூ.10¼ கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டினார்.

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில் வீடற்ற ஏழைகளுக்கு ரூ.8 கோடி செலவில் 92 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு கூடுதலாக ரூ.10 கோடியே 25 லட்சம் செலவில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர், கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 240 மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை வழங்கினார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் (பொறுப்பு) மல்லிகா, யூனியன் ஆணையாளர்கள் கிரி, முருகானந்தம், குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர் ஜெயசெல்வன், உதவி செயற்பொறியாளர் செல்வம், தலைமை ஆசிரியர் முனியசாமி, கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கணேஷ் பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story