‘ரெயில்வே விதிமுறைகளை பின்பற்றுங்கள்’- பயணிகளுக்கு நடிகர் அமிதாப் பச்சன் அறிவுரை
ரெயில்வே விதிமுறைகளை பின்பற்றுங்கள் என பயணிகளுக்கு நடிகர் அமிதாப் பச்சன் அறிவுரை கூறியுள்ளார்.
மும்பை,
மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி பலியானவர்கள் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான இந்த தகவலின் படி கடந்த 2013-ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்டு மாதம் வரை மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 18 ஆயிரத்து 423 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 ஆயிரத்து 847 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
இந்தநிலையில் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரெயில்வே வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அந்த வீடியோவில் நடிகர் அமிதாப் பச்சன் ரெயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். 2 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அமிதாப் பச்சன், பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்லநடைமேம்பாலங்களை பயன்படுத்த வேண்டும், விதிமுறைகளை பின்பற்றுங்கள் என பொதுமக்களுக்கு அறிவுரை கூறுகிறார். மேலும் 2 வயதில் முதன் முதலில் பார்த்த ரெயில் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
இதுகுறித்து ரெயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து மத்திய ரெயில்வே பொது மேலாளர் டி.கே.சர்மா கூறியதாவது:-
தற்போது பொதுமக்கள் செல்போன்களில் மூழ்கிவிடுகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகளை அலட்சியப்படுத்துகின்றனர். 99 முறை அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கலாம். ஆனால் 100-வது முறை உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போகலாம். எனவே எச்சரிக்கை தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story