18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என கோர்ட்டு தீர்ப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என கோர்ட்டு தீர்ப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2018 10:45 PM GMT (Updated: 25 Oct 2018 9:34 PM GMT)

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

நாமக்கல்,

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து நாமக்கல்லில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு முன்னாள் நகராட்சி துணை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். நகர கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட பொருளாளருமான டி.எல்.எஸ்.காளியப்பன் முன்னிலை வகித்தார். நாமக்கல் மணிக்கூண்டு அருகிலும், ஆஞ்சநேயர் கோவில் அருகிலும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

எருமப்பட்டி பழனிநகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் எருமப்பட்டி முன்னாள் யூனியன் தலைவர் பட்டு என்ற பத்மநாபன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலுசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வருதராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், பாலு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மோகனூர் ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். பேரூர் அவைத்தலைவர் ஆசைத்தம்பி, பேரூர் துணை செயலாளர் சிவஞானம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் ராமச்சந்திரன் (அணியாபுரம் - தோளுர்), ராமலிங்கம் (செவிட்டுரங்கன்பட்டி) சிவக்குமார், சக்திவேல், அருணகிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் நகர அ.தி.மு.க. செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில், ஒன்றிய செயலாளர் செந்தில் முன்னிலையில் பட்டாசு வெடித்தனர். இதில், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுப்பிரமணியம், நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், ஆலாம்பாளையம் பேரூர் செயலாளர் தனசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் நகர செயலாளர் நாகராஜன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இதேபோல் பஸ்நிலையம் அருகில் நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் பாலசுப்பிரமணி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

Next Story