மோட்டார்சைக்கிள் மோதியதை தட்டிகேட்டதால் ஆத்திரம்: 2 பேரை கத்தியால் குத்திய வாலிபர் கைது


மோட்டார்சைக்கிள் மோதியதை தட்டிகேட்டதால் ஆத்திரம்: 2 பேரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2018 4:15 AM IST (Updated: 26 Oct 2018 10:58 PM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதை தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் 2 பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகையை அடுத்த நாகூர் முடுக்குதாழை சந்தையை சேர்ந்தவர் சாதிக் பாஷா (வயது 46). இவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் இருந்து தர்கா அலங்கார வாசலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்களில் வந்த நாகை மகாலட்சுமி நகரை சேர்ந்த ரங்கநாதன் மகன் சந்தோஷ்குமார் (20) என்பவர் சாதிக் பாஷா மீது மோதினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது அருகே நின்று கொண்டிருந்த குஞ்சாலி மரைக்காயர் தெருவை சேர்ந்த முகமது கவுஸ் சாஹிப் என்பவர் மோட்டார் சைக்களில் மெதுவாக வர வேண்டியது தானே என்று சந்தோஷ்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த கத்தியை எடுத்து சாதிக் பாஷா, முகமது கவுஸ் சாஹிப் ஆகிய 2 பேரையும் குத்தினார். இதில் படுகாய மடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.

இதுகுறித்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.


Next Story