திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 2–வது நாளாக போராட்டம்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 2–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:00 AM IST (Updated: 27 Oct 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு பணிக்கொடையாக ஒட்டுமொத்த தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் நேற்று 2–வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் பாக்கியம் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் சக்தி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். நேற்று போராட்டத்தின் போது மதியம் அங்கேயே சத்துணவு ஊழியர்கள் சமையல் செய்து சாப்பிட்டனர்.


Next Story