13-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


13-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:00 AM IST (Updated: 27 Oct 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

13-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்
13-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டத்திலும் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

வேலூர் கொணவட்டம், கிருஷ்ணாநகரில் உள்ள பணிமனைகள், ஆம்பூர், ஆற்காடு, குடியாத்தம், திருப்பத்தூர், பேரணாம்பட்டு, சோளிங்கர் உள்பட 11 பணிமனைகளில் இந்த போராட்டம் நடைபெற்றது. பணிமனை வளாகங்களுக்குள் அமர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் 29-ந் தேதி போக்குவரத்துகழக தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு, அரசு அழைத்திருப்பதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் 13-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி முதல் பஸ்கள் ஓடாது என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Next Story