மாவட்ட செய்திகள்

தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல் + "||" + The welfare assistance to the workers must be made quicker - Instruction for District Revenue Officer for officers

தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்

தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
தர்மபுரி,

தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான் அறிவுறுத்தினார்.

தர்மபுரி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் சார்பில் மாவட்ட கண்காணிப்புகுழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லா கான் தலைமை தாங்கினார். தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா முன்னிலை வகித்தார்.


இதில், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலகம் மூலமாக தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், நலத்திட்ட உதவிகள் தொழிலாளர்களுக்கு விரைவாக கிடைக்க உரிய நடவடிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்க வேண்டும். பிற துறைகளில் தடையின்மை சான்றிதழை உரிய காலத்தில் வழங்க வேண்டும். மகப்பேறு நிதியுதவி, திருமண நிதியுதவி, இயற்கை மரண நிதியுதவி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களை உரிய ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி, தனி துணை கலெக்டர் அஜய் சீனிவாசன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
2. நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ராணிதோட்டம் பணிமனை முன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
3. இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி அனைத்து மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி அனைத்து மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் தொழிலாளர் உதவி ஆணையாளர் அறிக்கை
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் தொழிலாளர் உதவி ஆணையாளர் அறிக்கை உத்தரவிட்டு உள்ளார்.
5. 4 மாத நிலுவை சம்பளம் கேட்டு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
4 மாத நிலுவை சம்பளம் கேட்டு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.