ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் 3–வது நாளாக காத்திருப்பு போராட்டம்


ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் 3–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2018 4:15 AM IST (Updated: 27 Oct 2018 10:37 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் நேற்று 3–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழகம் முழுவதும், சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி ஈரோட்டில் தாலுகா அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிலுவைத்தொகை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று 3–வது நாளாக இவர்களது போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, செயலாளர் வெங்கிடு ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

சத்துணவு ஊழியர்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் போடப்பட்டு உள்ள பந்தலுக்குள் அமர்ந்து இரவு, பகல் பராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை அங்கேயே சமைத்தும் சாப்பிடுகிறார்கள்.


Next Story