10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் விஸ்வலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் அருணகிரி, மாவட்ட தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சிவலிங்கம் வரவேற்றார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 6-வது, 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை உடனே சரிசெய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய மாற்றத்தில் 21 மாத கால நிலுவைத்தொகையை உடனே தமிழக அரசு வழங்க வேண்டும், பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்காமல் பழைய நிலையே தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொருளாளர் கோவிந்தன், மாவட்ட தலைவர் ஆறுமுகம், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயலாளர் லூர்துசேவியர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக சிறப்பு தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பாலகுமார், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அருணகிரி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் ஜெயச்சந்திரன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சிவகுரு, தமிழ்நாடு சாலை பணியாளர்சங்க மாநில துணைத்தலைவர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்ட னர். முடிவில் தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் எழிலரசு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story