திருவண்ணாமலையில் 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


திருவண்ணாமலையில் 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2018 4:15 AM IST (Updated: 28 Oct 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை,

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் 500-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே சமையல் செய்து உணவு வழங்கப்பட்டது.

Next Story