தர்மபுரி, கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்


தர்மபுரி, கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:45 AM IST (Updated: 28 Oct 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று 3-வது நாளாக நடைபெற்றது.

தர்மபுரி,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று 3-வது நாளாக நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தேவேந்திரன் வரவேற்றார். சங்க பொருளாளர் ராஜா, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வகையில் நியாயமான ஓய்வூதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story