பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் திருவாரூரில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 28 Oct 2018 4:00 AM IST (Updated: 28 Oct 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தொ.மு.ச. துணை பொதுச் செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க தலைவர் சோமு, சி.ஐ.டி.யூ. கிளை தலைவர் ராமச்சந்திரன், தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை தலைவர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், ஊதிய ஒப்பந்தம் பலன்களை வழங்கிட வேண்டும். ஓய்வு பெறுபவர்களின் பண பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஓய்வு பெற்ற நலச்சங்க நிர்வாகிகள் ஜீவானந்தம், அண்ணாதுரை, தொ.மு.ச. கிளை பொருளாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் சண்முகம், துணைச் செயலாளர் மாரிமுத்து, சி.ஐ.டி.யூ. நிர்வாகி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story