மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி + "||" + Trying to cross the road Car kills woman

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி
சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலியானார்.
வேலூர்,

ஆரணி அருகேயுள்ள சின்னஅய்யம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி லட்சுமி (வயது 59)வேலூரை அடுத்த அன்பூண்டியில் வசிக்கும் உறவினரை பார்க்க பஸ்சில் நேற்று மாலை சென்றார். அங்கு பஸ் நிறுத்தத்தில் இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் திடீரென அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.


இதில், பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர்- விளாமுத்தூர் இடையே ரூ.3 கோடியில் சாலை விரிவாக்கம்
பெரம்பலூர்- விளாமுத்தூர் இடையே ரூ.3 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
2. மகன் கண் எதிரே பரிதாபம் சாலை விபத்தில் பெண் பலி
மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண், வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
3. கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுரை
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
4. திருப்பனந்தாள் அருகே அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
திருப்பனந்தாள் அருகே, அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. விழுப்புரத்தில், லாரி மீது கார் மோதல், பெண் உள்பட 2 பேர் பலி - கேரளாவை சேர்ந்தவர்கள்
விழுப்புரத்தில் லாரி மீது கார் மோதியதில் கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.