இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியில்லை தொல்.திருமாவளவன் அறிவிப்பு


இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியில்லை தொல்.திருமாவளவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2018 4:15 AM IST (Updated: 29 Oct 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பதவியேற்று இருப்பது, இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகும். இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கேயை நெருக்கடி மூலம் பதவியில் இருந்து இறக்கி, தன்னுடைய அரசியல் எதிரியான ராஜபக்சேவை பதவியில் அமர்த்தி இருக்கிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா.

சீன அரசு மற்றும் இந்திய அரசின் தலையீடு காரணமாக, பிரதமர் பதவியை ராஜபக்சே ஏற்று இருக்கிறார். இது தொடர்பாக சம்பந்தன் தலைமையிலான தமிழ் கூட்டமைப்பு மிகுந்த நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இது தவறான முன்னுதாரணமாகி விடும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள் ஆகும். திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story