மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 Oct 2018 4:15 AM IST (Updated: 29 Oct 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

புனே, 

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

விபத்து

புனே மாவட்டம் லோனவாலாவில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் சிலர் தாங்கள் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து சம்பவத்தன்று இரவு அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிள்களில் மும்பை - புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

2 மாணவர்கள் சாவு

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்கள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சென் (வயது21), பீகாரை சேர்ந்த விபுல் குமார் (22) என்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story