திருக்குவளை, வேதாரண்யத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்பு


திருக்குவளை, வேதாரண்யத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்பு
x
தினத்தந்தி 30 Oct 2018 4:15 AM IST (Updated: 29 Oct 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

திருக்குவளை, வேதாரண்யத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டார்.

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருக்குவளையில் அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய செயலாளர் வேதையன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் மீனா, இலக்கிய அணி செயலாளர் செல்வராஜ், கீழ்வேளூர் தொகுதி முன்னாள் கழக செயலாளர் பால்ராஜ், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்றார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு பேசினார். இதில் பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ், நாகை நகர செயலாளர் தங்க.கதிரவன், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் சாம்சன் பிராங்கிளின் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி சேது.ஜெயராமன் நன்றி கூறினார்.

இதேபோல வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அண்ணா அரங்கில் நகர செயலாளர் எழிலரசு தலைமையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய துணைச்செயலாளர் சரவணன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் எம்.ஜி.ஆர். மன்ற நகர செயலாளர் ஜானகிராமன், வக்கீல்கள் நமசிவாயம், சுப்பையன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் தொகுதி கழக செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர் வேதை.சிவசண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மொத்த கூட்டுறவு சங்க தலைவர் நமசிவாயம் நன்றி கூறினார்.

Next Story