மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பாம்பாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க கோரி பொதுமக்கள் மனு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பாம்பாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 30 Oct 2018 4:00 AM IST (Updated: 30 Oct 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பாம்பாற்றில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தகோரி மனு கொடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கிழாநிலைக்கோட்டை அருகே உள்ள ஏத்தநாட்டு கண்மாய் ஆயக் கட்டுதாரர்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கண்மாய்களில் ஏத்தநாட்டு கண்மாயும் ஒன்று. இந்த கண்மாயின் கீழ் பகுதியில் பாம்பாறு செல்கிறது. இந்த ஆற்றில் மணல் அள்ளுவதற்காக ஏத்தநாட்டு கண்மாயின் கரையை வெட்டி சாலை அமைத்து, ஆற்றில் இருந்து டிராக்டர்கள், மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி சென்று லாரிகளில் ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் கண்மாய் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது பருவமழை தொடங்க இருப்பதால், கலெக்டர் ஏத்தநாட்டு கண்மாய் கரை மற்றும் வரத்துவாரிகளை பார்வையிட்டு, பாம்பாற்றில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி, கண்மாயின் கரையை சீரமைக்க வேண்டும். மேலும் வருங்காலங்களில் கண்மாய் கரையை வெட்டாமல் இருக்கவும், பாம்பாற்றில் இருந்து மணல் அள்ளாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். பின்னர் பொது மக்கள் பலர் கோரிக்கை மனுக் களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Next Story