திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரடாச்சேரி,
பேரூராட்சிகளில் விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி பேசினார்.
இதில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பரமசிவம், செயலாளர் ஜெயபால், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பரமையன், செயலாளர் மணிகண்டன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய தலைவர் கோபிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதே போல மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், சி.ஐ.டி.யூ. திருவாரூர் மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் பேசினர். இதில் நகர நிர்வாகிகள் சந்திரா, ரெகுபதி, அகோரம், சிராஜூதீன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, ராமசாமி, சாமியப்பன், இடும்பையன், ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சோம.ராஜாமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாவட்டக்குழு உறுப்பினர் கைலாசம், நகர செயலாளர் ஜோசப், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுமதி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி முன்பு நகர செயலாளர் ரகுராமன் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நகர குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கே.கோபு, எஸ்.தண்டபாணி, ஏ.கே.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story