ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1,500 டன் ஜிப்சம் அகற்றம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1,500 டன் ஜிப்சம் அகற்றம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2018 3:00 AM IST (Updated: 30 Oct 2018 7:38 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1,500 டன் ஜிப்சம் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1,500 டன் ஜிப்சம் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது;–

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அமிலம் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் வெளியேற்றும் பணி நடந்தது. இதில் 90 சதவீதம் ரசாயன பொருட்கள் வெளியேற்றப்பட்டன. தற்போது ஆலையில் ஜிப்சம், ராக் பாஸ்பேட், தாமிர தாது உள்ளிட்டவைகள் அதிக அளவில் உள்ளது. இவைகள் வெளியேற்றும் பணி கடந்த 9–ந்தேதி உதவி கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 1,500 டன் ஜிப்சம் வெளியேற்றப்பட்டு உள்ளது. ராக் பாஸ்பேட் வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டு வருகிறது. தாமிர தாதுகள், விற்பனை செய்தவர்களிடம் மீண்டும் திரும்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒரு மாதத்துக்குள் இந்த பணிகள்

முடிவடையும். 
பிளாஸ்டிக் ஒழிப்பு 


தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் வருகிற 2019–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் தடை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளின் மூலம் துணிப்பைகள் வழங்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் தனி குழு அமைத்து மாணவ– மாணவிகளுக்கு துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதே போல் தாலுகா வாரியாக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வேறு எந்தந்த பொருட்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதை மக்கள் இயக்கமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story