சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி, மாணவன் பலி
சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி, மாணவன் ஆகிய 2 பேர் பலியானார்கள்.
சேலம்,
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமம், தாடிக்காரனூர் பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும், கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த சுகன்யா (வயது 20) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சுகன்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் சுகன்யாவுக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென்று மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தாரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் இரவு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இதைத்தொடர்ந்து சுகன்யாவை மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தபோது சுகன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சுகன்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மர்ம காய்ச்சலால் கர்ப்பிணி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல, வாழப்பாடி அருகே பேளூர் 8-வது வார்டு இரட்டைபனங்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். கொத்தனார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகன் சத்ரியன்(12). இவன் அத்தனூர்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாணவனுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வாந்தி, மூச்சுத்திணறலால் அவதிப்பட்டான்.
இதைத்தொடர்ந்து சத்ரியனை வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவனை சேர்த்தனர். அங்கு பரிசோதித்த போது சத்ரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவன் உடலை பெற்றோர் எடுத்து சென்றனர்.

Related Tags :
Next Story