ஆப்பிள் பீட்ஸ் சோலோ 3 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்
பீட்ஸ் நிறுவனம் மிக்கி மவுஸ் பொம்மைகள் பொறிக்கப்பட்ட விசேஷமான வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு கார்டூன் கேரக்டர் உண்டென்றால் அது வால்ட் டிஸ்னி உருவாக்கிய மிக்கி மவுஸ் கேரக்டர்தான். இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு 90 ஆண்டுகளாகிறது. இதைக் கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் அங்கமான பீட்ஸ் நிறுவனம் மிக்கி மவுஸ் பொம்மைகள் பொறிக்கப்பட்ட விசேஷமான வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் ஹெரிடேஜ் 1928 என்ற எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த ஹெட்போன் விலை 330 டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 24,300 ஆகும். வழக்கமான ஹெட்போனை விட இது 30 டாலர் அதிக விலையாகும்.
இந்த ஹெட்போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்.
இந்த ஹெட்போனை வைப்பதற்கு ஏற்ற கேரிபேக், 3.5 மி.மீ. தடிமன் கொண்ட ரிமோட் டாக் கேபிள், யு.எஸ்.பி. மைக்ரோ கேபிள் ஆகியவற்றுடன் உத்திரவாத அட்டையுடன் இது வெளிவந்துள்ளது.
Related Tags :
Next Story