காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 90 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதி - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 90 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2018 10:30 PM GMT (Updated: 31 Oct 2018 8:46 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 90 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 90 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ரத்த அணுக்கள் மிக குறைவாக உள்ளவர்கள் என யாரும் இல்லை. டெங்கு கொசு உற்பத்தியை ஒழிப்பது மிக முக்கியம்.

சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். டெங்கு கொசு வளர்வதற்கான ஆதாரங்கள் இன்றியும் பிளாஸ்டிக் இல்லாத வகையிலும் உள்ள பள்ளிகளில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி பசுமை பள்ளி என தேர்ந்தெடுக்கப்படும்.

இங்கு தற்போது 48 வாகனங்கள் மூலம் மாவட்டத்தின் பல இடங்களுக்கு சென்று முகாமிட்டு காய்ச்சல் இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளிப்பார்கள். மாவட்டத்தில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story