புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
கிராம உதவியாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 1.1.2016 முதல் ஊதியக்குழு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பொங்கல் போனசை சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அப்பாசாமி, அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சுதாகர், வட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். வட்ட துணை தலைவர் முரளி, வட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லப்பா, முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பாண்டியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் மணிவண்ணன், சத்துணவு ஊழியர் சங்க வட்ட மாவட்ட துணை தலைவர் ரவிதாஸ், வருவாய்த்துறை அலுவலக சங்க வட்ட தலைவர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்ட தலைவர் பசுபதி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். இதில் மாநில துணை தலைவர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலத்தில் சங்கத்தின் வட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் வட்ட நிர்வாகி முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்ட தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கிராம உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், வட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், இணை வட்ட செயலாளர்கள் காத்ரின், கோபாலகிருஷ்ணன், மருத்துவத்துறை வட்ட தலைவர் காந்தி, ஊரக வளர்ச்சி துறை பொருளாளர் அமர்நாத், வட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசலில் சங்கத்தின் வட்ட தலைவர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் சாமிநாதன், இணை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ராஜமாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் வட்ட செயலாளர் தெட்சிணாமூர்த்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்க பிரதிநிதி கண்ணன், சத்துணவு ஊழியர் சங்க பிரதிநிதி பாலசுப்பிரமணியன், மகளிர் அணி செயலாளர் சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story