டெங்கு கொசு உற்பத்தி: 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - கலெக்டர் நிர்மல்ராஜ் நடவடிக்கை


டெங்கு கொசு உற்பத்தி: 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - கலெக்டர் நிர்மல்ராஜ் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Nov 2018 5:00 AM IST (Updated: 1 Nov 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்த 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.

திருவாரூர்,

திருவாரூர் கிடாரங்கொண்டானில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நேற்று மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு கட்டிடங்கள் சிலவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறம் அசுத்தமாக காட்சி அளித்தது. இதை பார்வையிட்ட கலெக்டர், அந்த குடியிருப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் 4 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தர விட்டார்.

இதுகுறித்து கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டிடத்தின் மாடியில் தண்ணீர் தேங்கினாலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்.

எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க தவறிய வீடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story