சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Nov 2018 4:15 AM IST (Updated: 1 Nov 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர், 

திருப்பூர் கேத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 30). கூலி வேலை செய்து வந்தார். இவருடைய வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அடிக்கடி தண்ணீர் எடுக்க வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த சிறுமியுடன் தண்டபாணி முதலில் நட்பாக பழகியுள்ளார்.

பின்னர் நாளடைவில் சிறுமியிடம் ஆசை வார்த்தைகைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெற்றோரிடம் தெரிவிக்க கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமி 5 மாத கர்ப்பமானாள். இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையை தொடர்ந்து தண்டபாணியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில், பாலியல் பலாத்கார வழக்கு, நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்காக வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தண்டபாணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

Next Story