இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ராஜ்யோத்சவா விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு


இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ராஜ்யோத்சவா விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 1 Nov 2018 4:24 AM IST (Updated: 1 Nov 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ராஜ்யோத்சவா விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக ராஜ்யோத்சவா தின விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கன்னட ராஜ்யோத்சவா விழா இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த முறை 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நாளை மறுநாள் அதாவது 3-ந் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

இந்த நிலையில் ராஜ்யோத்சவா விருது வழங்கும் விழா நடத்துவது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கன்னட வளர்ச்சித்துறை மந்திரி ஜெயமாலா மற்றும் அந்த துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ராஜ்யோத்சவா விருது வழங்கும் விழா ஒத்திவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு ஒரு தேதியை தேர்வு செய்து, இந்த விருது வழங்கும் விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story