புனேயில் விபசாரத்தில் தள்ளப்பட்ட சிறுமிகள் உள்பட 21 பெண்கள் மீட்பு
புனேயில் விபசாரத்தில் தள்ளப்பட்ட சிறுமிகள் உள்பட 21 பெண்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 5 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
புனே,
புனே புத்வார்பேத் பகுதியில் சட்டவிரோதமாக விபசாரம் நடந்து வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பரஸ்கானா போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் புத்வார்பேத் பகுதியில் வெவ்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது, அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விபசாரத்தில் தள்ளப்பட்டு இருந்த 5 சிறுமிகள் உள்பட 21 பெண்களை போலீசார் மீட்டனர். இவர்களில் ஐந்து பேர் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதையடுத்து அவர்களை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்து வந்த தரகர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மும்பை, தானே, புனே பகுதிகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து அவர்களை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.
போலீசார் மீட்கப்பட்டவர்கள் அனைவரையும் ஹடப்சரில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story