பாளையங்கோட்டை அருகே துணிகரம் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
பாளையங்கோட்டை அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மூதாட்டிபாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி கஸ்பா தெருவை சேர்ந்தவர் திரவியம். அவருடைய மனைவி தாயம்மாள்(வயது72). திரவியம் இறந்துவிட்டார். இவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி அவர்கள் தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் தாயம்மாள் மட்டும் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் தாயம்மாள் தனது வீட்டு கதவை பூட்டிவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மர்மநபர் வீட்டின் கதவில் போட்டு இருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, தாயம்மாள் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலி மற்றும் மோதிரத்தை பறிக்க முயன்றான்.
7 பவுன் பறிப்புஅதிர்ச்சி அடைந்த தாயம்மாள் சத்தம்போட்டார். உடனே அந்த நபர், அவரை தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் சங்கிலி மற்றும் மோதிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தாயம்மாளிடம் நகையை பறித்து சென்ற வாலிபரை தேடிவருகிறார்கள். மோப்பநாய் பூளுட்டோ வந்து மோப்பம் பிடித்தது. கைரேகை நிபுணர்கள் வந்து ரேகையை பதிவு செய்தனர்.