கட்டுமான அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் கைது


கட்டுமான அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2018 5:11 AM IST (Updated: 2 Nov 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

தானே காசர்வடவலி பகுதியில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அங்கு புதிதாக கட்டிடம் ஒன்று கட்டி வருகிறார்.

தானே,

கட்டுமான நிறுவன அதிபரை முன்னாள் கவுன்சிலர் சுதிர் பாட்கே என்பவர் சந்தித்து சட்டவிரோதமாக கட்டிடம் கட்டி வருவதாக தெரிவித்தார். இது குறித்து மாநகராட்சியிடம் புகார் அளிக்காமல் இருக்க தனக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் என மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன கட்டுமான அதிபர் அவரிடம் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் தருவதாக கூறினார். பணத்தை பெற்ற சுதிர் பாட்கே மீதி ரூ.45 லட்சத்தை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தார்.

இதனால் எரிச்சல் அடைந்த அவர் சம்பவம் குறித்து காசர்வடவலி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சுதிர் பாட்கே உள்பட கூட்டாளிகளான சவுகத் முலானி, ஆரிப், பிரமோத் பாட்டில் ஆகியோரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மிரட்டி பணம் பறித்ததில் பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் ராஜ்குமார் யாதவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் நேற்று அவரை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Next Story