ஹாசனாம்பா கோவிலில் குமாரசாமி குடும்பத்துடன் தரிசனம்
ஹாசனாம்பா கோவிலில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
ஹாசன்,
ஹாசன் டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி மட்டும் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு நேற்று முன்தினம் ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் 9-ந்தேதி வரை ஹாசனாம்பா கோவில் நடை திறந்திருக்கும். முதல் நாளான நேற்று முன்தினம் கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடந்ததால், பொதுமக்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
2-வது நாளான நேற்று காலை 5 மணி முதல் பொதுமக்கள், ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஹாசனாம்பாவை தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். நேற்று ஹாசனாம்பாவுக்கு சிறப்பு பூஜைகளும், விசேஷ அபிஷேகங்களும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஹாசனாம்பாவை தரிசனம் செய்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் முதல்-மந்திரி குமாரசாமி தனது குடும்பத்தினருடன் ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய வந்தார். குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, தாய் சென்னம்மா, மனைவி அனிதா குமாரசாமி ஆகியோர் சென்றிருந்தனர். அவர்களுக்கு மாவட்ட ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து குமாரசாமி, தனது குடும்பத்தினருடன் ஹாசனாம்பா கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
முதல்-மந்திரி குமாரசாமி, ஹாசனாம்பா கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருவதாக தகவல் கிடைத்ததால், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
அதன்பின்னர் மதியம் 1 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 24 மணி நேரமும் திறந்திருக்கும் ஹாசனாம்பா கோவிலில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குமாரசாமி வருகையையொட்டியும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததாலும், ஹாசனாம்பா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இங்கு 9-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்பதால், முக்கிய பிரமுகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story