நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதே எங்களின் இலக்கு ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதே எங்களின் இலக்கு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஆனால் சிறு, குறு தொழில்களை ஊக்குவித்து வருவதாக மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஒரு சிலை அமைப்பதற்கு 3 ஆயிரம் கோடி ரூபாயும், அதை விளம்பரப்படுத்துவதற்கு 5 ஆயிரம் கோடி ரூபாயும் என மொத்தம் 8 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. எனவே வருகிற நாடாளுமன்றதேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதே எங்களின் இலக்கு. இதற்காக ஒரு அணியை திரட்டுவோம். ஆனால் தேர்தல் கூட்டணி என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். இதுதொடர்பாக கட்சியின் தலைமை ஆலோசித்து முடிவு செய்யும்.
நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முருகன் அளித்த வாக்குமூலமும், நிர்மலாதேவியின் வாக்குமூலமும் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. மிக முக்கிய பிரமுகர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது. எனவே வெளிப்படை தன்மையான விசாரணை அமைய வேண்டும்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தி இருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜனதாவும் இதை அரசியலாக்க வருகின்றன.
தமிழகத்தில் கல்வித்துறையில் ஊழல் மிகுந்துவிட்டது. பேராசிரியர் நியமனம் முதல் துணைவேந்தர் நியமனம் வரை ஊழல் நடக்கிறது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். அ.தி.மு.க. அரசின் அமைச்சர்களில் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை ஊழல் நடந்திருக்கிறது. இதன் வெளிப்பாடு தான் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை.
குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். எனவே இவற்றை வலியுறுத்தி நவம்பர் மாத இறுதியில் மக்கள் கோரிக்கை மாநாடு நடத்த இருக்கிறோம். மாநாடு நடைபெறும் நாள் மற்றும் இடம் விரையில் முடிவு செய்யப்படும். மாநாடு முடிந்ததும் டிசம்பர் மாத தொடக்கத்தில் மாவட்டம் தழுவிய அளவில் நடைபயணம் நடத்தி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story