தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைவீதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. குற்ற சம்பவங்களை தடுக்க 127 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மலைக்கோட்டை,
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஜவுளி, நகைகள், பட்டாசு உள்பட பொருட்கள் வாங்க மக்கள் சாரை, சாரையாக நேற்று திருச்சி கடைவீதிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால், கடைகளில் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், தரைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்காக ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து துணிகள் வாங்க கடைவீதிக்கு வரும்போது அவர்களிடம் உள்ள பணம் மற்றும் பொருட் களை சிலர் திருடி சென்று விடுகின்றனர். இதுபோன்ற திருட்டுகளை தடுக்கும் வண்ணம் கோட்டை போலீஸ் சரகத்தில் தெப்பக்குளம் பகுதியில் புறக்காவல் நிலையம், மலைக்கோட்டை நுழைவு வாயில், சிங்காரத்தோப்பு பகுதியில் பூம்புகார் விற்பனை நிலையம், பெரிய கடைவீதியில் இருந்து வரும் இடம் உள்ளிட்ட 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் அதில் அதிநவீன கேமரா, தொலைநோக்கி கருவி கொண்டு கண்காணித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கோட்டை பகுதியில் மட்டும் 127 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்காக கோட்டை பகுதியில் சிங்காரத்தோப்பு, சின்னகடைவீதி, பாபுரோடு, நந்திகோவில் தெரு, மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதிக்குள் 4 சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், 2 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் கோடிலிங்கம், பெரியண்ணன் உள்ளிட்ட 4 உதவி கமிஷனர்கள், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் உள்ளிட்ட 12 இன்ஸ்பெக்டர்கள் கண்காணிப்பில் 76 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 784 போலீசார் காலை, மாலை என பிரித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க சாதாரண உடையிலும் குற்றப்பிரிவு போலீசார் மக்களோடு மக்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். பள்ளி, கல்லூரி என்.எஸ்.எஸ்.மாணவர்களும் போலீசாருக்கு உதவியாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :
Next Story