பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் - போக்சோ சட்டத்தில் கைது


பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் - போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 4 Nov 2018 4:15 AM IST (Updated: 4 Nov 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள வாழைக்காய்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மதார் (வயது 70). இவர், அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதார், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை மிரட்டி பலமுறை கற்பழித்துள்ளார்.

இதற்கிடையே அந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவியை அவருடைய பெற்றோர், மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, காவலாளி தன்னை கற்பழித்து வந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, போக்சோ சட்டத்தின் கீழ் (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்) மதாரை கைது செய்தார்.

Next Story