கர்நாடக ஐகோர்ட்டுக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட கூடுதல் நீதிபதிகள் உள்பட 12 பேர் பதவி ஏற்பு
கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கூடுதல் நீதிபதிகள் உள்பட 12 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு, கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பெங்களூரு,
கர்நாடக ஐகோர்ட்டில் தற்போது 24 நீதிபதிகள் உள்ளனர். மேலும் 38 நீதிபதிகளின் பணி இடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 5 நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தர விட்டது. அதாவது புதிய கூடுதல் நீதிபதிகளாக மூத்த வக்கீல்கள் அசோக் கோலப்பா நிஜகனவர், ஹெதூர் புட்டசாமிகவுடா சந்தேஷ், கிருஷ்ணன் நடராஜன், பிரலத்ராவ் கோவிந்தராவ் முத்தாலிக் பட்டீல், அப்பசாகேப் சாந்தப்பா பெல்லுன்கே ஆகிய 5 பேரும் நியமிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் கெம்பையா சோமசேகர், கொட்டரவா சோமப்பா முத்கல், சீனிவாஸ் ஹரீஷ்குமார், ஜான் மைக்கேல் குன்கா, பசவராஜ் அன்டனகவுடா பட்டீல், நங்கிலி கிருஷ்ணராவ் சுதிந்திரராவ், ஒசூர் புஜன்கரயா பிரபாகர் சாஸ்திரி ஆகிய 7 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில், 5 கூடுதல் நீதிபதிகள் உள்பட 12 நீதிபதிகளின் பதவி ஏற்பு விழா நேற்று ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது 5 கூடுதல் நீதிபதிகள் மற்றும் 7 நிரந்தர நீதிபதிகளுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார். பின்னர் புதிய நீதிபதிகளாக பதவி ஏற்ற 12 பேருக்கும், கவர்னர் வஜூபாய் வாலா மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி வாழ்த்து தெரிவித்தார்கள்.
கர்நாடக ஐகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜான் மைக்கேல் குன்கா, பெங்களூரு தனிக்கோர்ட்டில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில், விசாரணை நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக ஐகோர்ட்டில் ஒட்டு மொத்தமாக 29 நீதிபதிகள் உள்ளனர். இன்னும் காலியாக உள்ள நீதிபதிகளின் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Tags :
Next Story