சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குவிந்த பொதுமக்கள்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் சுகாதாரப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காலி இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்களை ஒழிப்பது, தெருவில் உள்ள குப்பை கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துதல், தண்ணீர் தொட்டியில் மருந்து ஊற்றுதல் உள்ளிட்ட பணிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவரும், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 3 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தேவையான மருந்து, மாத்திரைகள் அனைத்தும் தயாராக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலால் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தாலும், சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த சில நாட்களாக ஏராளமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக குவிகின்றனர். இதனால் வழக்கத்தைவிட நேற்று ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பதிவு சீட்டு பெறுவதற்கு ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சீட்டுகளை வாங்கி சென்று சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் காண்பித்து சிகிச்சை பெற்றனர். இதேபோல், மருந்து, மாத்திரைகளை வாங்குவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது.
காய்ச்சல் பாதிப்பால் ஆஸ்பத்திரிக்கு அதிகளவில் மக்கள் வரத்தொடங்கியுள்ளதால் நோயாளிகளை நீண்டநேரம் காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் சிகிச்சை அளிப்பதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) ராஜேந்திரன் கூறுகையில், காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள். அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம். டெங்கு, பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் பொதுமக்கள் யாரேனும் வந்தால் அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவினர் தயாராக உள்ளனர். இதற்காக தனி வார்டு ஏற்படுத்தி, அங்கு ஆண்களுக்கு 200 படுக்கைகளும், பெண்களுக்கு 200 படுக்கைகளும் தயாராக உள்ளன. இதுதவிர, தேவையான கொசுவலைகளும் எங்களிடம் இருப்பு இருக்கிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சித்தா பிரிவுக்கு வந்து நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம், என்றார்.

Related Tags :
Next Story