பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் பிரிவின் மாநில தலைவர் ஹசன் மவுலானா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இளைஞர் காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் மேத்தா, காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தை விசாரித்து வந்த சி.பி.ஐ. இயக்குனரை அந்த பதவியிலிருந்து நீக்கிய மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பெட்ரோலிய பொருட்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும், காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.460-க்கு வழங்கப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் பா.ஜ.க. ஆட்சியில் ஏறத்தாழ ரூ.ஆயிரத்திற்கு விற்பனை செய்வதால் ஏழை, எளிய நடுத்தரவர்க்க குடும்பத்தினர் பாதிக்கப்படுவதால் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் இந்திரா, காமராஜ், மதன், சேவாதளம் மாவட்ட பொறுப்பாளர் சிவாஜிமூக்கன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story