‘பார்க்கிங்’ செய்வதில் மோதல்: பெண்ணை தாக்கி, கார் கண்ணாடி உடைப்பு தந்தை, மகனுக்கு வலைவீச்சு


‘பார்க்கிங்’ செய்வதில் மோதல்: பெண்ணை தாக்கி, கார் கண்ணாடி உடைப்பு தந்தை, மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Nov 2018 9:30 PM GMT (Updated: 2018-11-06T03:00:45+05:30)

அரியாங்குப்பத்தில் கார் ‘பார்க்கிங்’ செய்வதில் ஏற்பட்ட மோதலில் பெண்ணை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்த தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, 

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 41). இவர்களுக்கு சொந்தமான காரை அதே பகுதியில் காலிமனை ஒன்றில் நிறுத்தி வைத்திருந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த முருகையன், அவருடைய மகன் பொன்னுசாமி ஆகியோரும் காலி மனையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வந்தனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

தந்தை, மகனுக்கு வலைவீச்சு

சம்பவத்தன்று லட்சுமி அவருடைய காரை வழக்கமான இடத்தில் நிறுத்த சென்றார். அங்கு பொன்னுசாமி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இது குறித்து முருகையன் மற்றும் பொன்னுசாமியிடம் லட்சுமி கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் சேர்ந்து லட்சுமியை தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவர்கள் காரின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி, உடைத்தனர்.

இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் லட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகையன், பொன்னுசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story