ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் பலத்த காற்றுடன் மழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் பலத்த காற்றுடன் மழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 7:09 PM GMT)

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

ராமேசுவரம்,

இலங்கை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதை தொடர்ந்து ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மணிக்கு சுமார் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் மீன்பிடி அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை.

இதனால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்கின்றன.

Next Story