மாவட்ட செய்திகள்

முசிறி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலி + "||" + The farmer kills the swine flu near Musiri

முசிறி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலி

முசிறி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலி
முசிறி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியானார்.
முசிறி,

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகமுத்து (வயது 67), விவசாயி. இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையாக காய்ச்சல் இருந்துவந்தது. இதையடுத்து அவர் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


பின்னர் நாகமுத்துவை அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நாகமுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பெரும்சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கிராமங்கள் தோறும் சுகாதார பணிகளை மேம்படுத்துவதோடு மருத்துவ குழுவினர்கள் சார்பில் முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சையும், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார், பஸ் மீது மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார் பஸ் மீது மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
2. கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பலி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேரும்,, வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவரும் பரிதாபமாக இறந்தனர்.
3. மோட்டார் சைக்கிளுடன் விழுந்த மெக்கானிக் பலி மாடுகுறுக்கே பாய்ந்ததால் விபரீதம்
மணமேல்குடி அருகே மாடுகுறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த மெக்கானிக் பலியானார்.
4. கர்நாடகத்தில் நின்ற லாரி மீது சுற்றுலா பஸ் மோதல் : மும்பையை சேர்ந்த 6 பேர் நசுங்கி சாவு
கர்நாடகத்தில் லாரி மீது சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர்.
5. திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.