தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.3.45 கோடிக்கு மது விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.3.45 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 9:42 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ரூ.3.45 கோடிக்கு மது விற்பனையானது.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையின் போது டாஸ்மாக் மது விற்பனை ஜோராக நடக்கும். பண்டிகைகளின் போது தட்டுப்பாடின்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அதிக அளவில் மதுபான வகைகள் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விற்பனை வருவாய் இலக்கும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி சில நாட்களுக்கு முன்பே மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் மதுபானங்கள் வாகனங்கள் மூலம் அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டன. இவைகள் கடைகளில் இருப்பு வைக்கப் பட்டன.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி, வேப்பனபள்ளி, பருகூர், காவேரிப்பட்டணம், மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 117 டாஸ்மாக் மதுபான கடைகளில் தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் ரூ.3 கோடியே 45 லட்சத்திற்கு மதுவிற்பனையாகி உள்ளது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக மது விற்பனை ஆகி உள்ளது என்று தெரிவித்தனர். 

Next Story