மாவட்ட செய்திகள்

பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது + "||" + The consultation meeting was held in Nagercoil to prevent the spread of swine flu

பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது

பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது
பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் நகரசபை அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.


கூட்டத்துக்கு நகர்நல அதிகாரி கின்சால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் பேசும்போது கூறியதாவது:–

பன்றி காய்ச்சல் கடந்த 2010–ம் ஆண்டு முதல் பரவி வருகிறது. மழை காலம், குளிர் காலங்களில் வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் 3 அடி தூரம் தொலைவில் நின்று தான் பேச வேண்டும். வர்த்தக நிறுவனங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மக்கள் அதிகமாக வரும் வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் உள்ள தரைகள், கைப்பிடிகள், கிரில்கள் போன்றவற்றை லைசால் அல்லது ‘சர்ஜிக்கல் ஸ்பிரிட்‘ என்று சொல்லக்கூடிய கிருமி நாசினியைக் கொண்டு துடைக்க வேண்டும்.

டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களை மூடி பராமரிக்க வேண்டும். மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு சென்று வந்தால் கைகளை கழுவி தூய்மையாக பராமரிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு உடனே விடுமுறை வழங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு மதுசூதனன் கூறினார்.

கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதேவன்பிள்ளை, ராஜா, ஜோஸ், சத்தியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தார்சாலை அமைக்க கோரி, கலெக்டர் அலுவலகத்துக்கு ஜல்லிக்கற்கள், சிமெண்டு கலவையுடன் வந்து மனு
தார்சாலை அமைக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு ஜல்லிக்கற்கள், சிமெண்டு கலவையுடன் வந்தவர் களால் பரபரப்பு ஏற்பட்டது.
2. அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
3. அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
4. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
5. விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் கூறினார்.