தக்கலை அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை


தக்கலை அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால்  தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2018 4:30 AM IST (Updated: 9 Nov 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெட்பினோ ராஜ் (வயது 36), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து ஜெட்பினோ ராஜின் மனைவி தனது மகனை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார்.

காதல் மனைவி பிரிந்து சென்ற பின்பு ஜெட்பினோ ராஜ் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் வீட்டில் அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை தேடினர். அப்போது, வீட்டின் பின் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஜெட்பினோ ராஜின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது. மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story