மாவட்ட செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே மீனவ கிராமத்தில் கோஷ்டி மோதல் பாதிரியார் உள்பட 21 பேர் மீது வழக்கு + "||" + The case was filed against 21 persons, including a clash of clergy in the fishermen's village near Manavalakurichi

மணவாளக்குறிச்சி அருகே மீனவ கிராமத்தில் கோஷ்டி மோதல் பாதிரியார் உள்பட 21 பேர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே மீனவ கிராமத்தில் கோஷ்டி மோதல் பாதிரியார் உள்பட 21 பேர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி அருகே மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக பாதிரியார் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே கடற்கரை கிராமத்தில் மணல் எடுப்பது தொடர்பாக சின்னவிளை, முட்டம் பகுதி மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், அவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டு இருதரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.


இந்தநிலையில் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அவர்கள் கட்டை, கம்பி போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். மீன்பிடி உபகரணங்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், படகுகள், வலைகள் போன்றவை சேதமடைந்தன.

இந்த மோதல் தொடர்பாக ஒரு தரப்பை சேர்ந்த அந்தோணி அடிமை, மற்றொரு தரப்பை சேர்ந்த அமலோற்பவம் ஆகியோர் தனித்தனியாக மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் சின்னவிளை பாதிரியார் ஆன்டனி கிளாரட் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. பாபநாசம் அருகே, முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதல்; பெண்ணுக்கு கத்திக்குத்து 3 பேர் கைது
பாபநாசம் அருகே முன்விரோதத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. மினி வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: தாய், மகள் பரிதாப சாவு - சேந்தமங்கலம் அருகே சோகம்
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி மினி வேன் மீது மோதியதில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர்.
3. பொன்னேரி அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் மோதல்; 5 பேர் படுகாயம்
பொன்னேரி அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் மோதல் - பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் பலி
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் இறந்தனர்.
5. வேன்-லாரி மோதிய விபத்தில் இறந்த 10 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
புதுக்கோட்டை அருகே வேன்-லாரி மோதிய விபத்தில் இறந்த 10 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்தஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.