மாவட்ட செய்திகள்

உத்தமபாளையம் அருகே: மோட்டார்சைக்கிள் மீது மினிவேன் மோதி 2 வாலிபர்கள் பலி - டிரைவர் கைது + "||" + Near Uthamapalayam:2 young men kills minivans on motorcycle -Driver arrested

உத்தமபாளையம் அருகே: மோட்டார்சைக்கிள் மீது மினிவேன் மோதி 2 வாலிபர்கள் பலி - டிரைவர் கைது

உத்தமபாளையம் அருகே: மோட்டார்சைக்கிள் மீது மினிவேன் மோதி 2 வாலிபர்கள் பலி - டிரைவர் கைது
உத்தமபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் மீது மினிவேன் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி முஸ்லிம் தெருவை சேர்ந்த சிக்கந்தர் மகன் காதர்மைதீன்(வயது 29). திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இதே பகுதியை சேர்ந்தவர் சுருளிமஸ்தான்(35). இதே ஊரை சேர்ந்த சுருளிவேல் மகன் சூர்யா (25). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இரவு க.புதுப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவுக்கு நண்பர்களை அழைத்து சூர்யா உபசரித்துள்ளார். இதையடுத்து நண்பர்கள் 3 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் உத்தமபாளையம் நோக்கி சென்றனர். மோட்டார்சைக்கிளை காதர்மைதீன் ஓட்டினார். காக்கில்சிக்கையன்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மினிவேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் காதர்மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் இதிரீஸ்கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த காதர்மைதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுருளிமஸ்தான் பரிதாபமாக இறந்து போனார்.

இதையடுத்து சூர்யா உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிவேன் டிரைவர் கூடலூரை சேர்ந்த தங்ககாமன் (29) என்பவரை கைது செய்தனர். விபத்தில் நண்பர்கள் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; டிரைவர் பலி
தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் கிளீனருக்கு படுகாயம் ஏற்பட்டது.
2. திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி
திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
3. பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி உடுமலை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர்களுக்கு செல்வதற்காக உடுமலை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது.
4. நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து: காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற டிரைவர் பலி
நாகை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி மதுபாட்டில்களை கடத்தி சென்ற காரின் டிரைவர் பலியானார். அவருடன் வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
5. சேத்தியாத்தோப்பில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; பல்கலைக்கழக ஊழியர் சாவு
சேத்தியாத்தோப்பில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் உயிரிழந்தார்.