சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. போராட்டம் விஜய் பட பேனர் கிழிப்பு
சங்கரன்கோவிலில் ‘சர்கார்’ படம் ஓடிய தியேட்டர் முன்பு அ.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விஜய் பட பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் ‘சர்கார்’ படம் ஓடிய தியேட்டர் முன்பு அ.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விஜய் பட பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியாகி உள்ள ‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று உள்ளதாக கூறி அதற்கு அ.தி. மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள கீதாலயா தியேட்டரில் சர்கார் படம் திரையிடப்பட்டு உள்ளது. அந்த தியேட்டர் முன்பு அ.தி.மு.க.வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
பேனர் கிழிப்பு
ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய் பட பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
அப்புறப்படுத்தினர்
இதையடுத்து தியேட்டரில் காட்சி நிறுத்தப்பட்டது. அப்போது டிக்கெட்டுகள் எடுத்திருந்த ரசிகர்கள் காட்சியை நிறுத்தக்கூடாது என்று கூறினர். இருதரப்பினரும் அப்பகுதியில் கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த போராட்டத்தையடுத்து நெல்லை மாவட்டத்தில் சர்கார் படம் ஓடிய தியேட்டர் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story