திருமங்கலத்தில் வீட்டில் இருந்த 44 பவுன் நகைகள் மாயம்
திருமங்கலத்தில் வீட்டில் இருந்த 44 பவுன் நகைகள் மாயமானதாக பெண் போலீசில் புகார் செய்தார்.
அம்பத்தூர்,
சென்னை திருமங்கலம் அன்பு காலனியை சேர்ந்தவர் வசந்தி (வயது 52). தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது மகள் திருமணத்துக்காக சிறுக, சிறுக நகைகள் சேர்த்து வைத்து இருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து பார்த்தார். அதில் 44 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தனது மகன், மகள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டார். ஆனால் யாருக்கும் நகைகள் மாயமானது பற்றி தெரியவில்லை.
இது குறித்து திருமங்கலம் போலீசில் வசந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உறவினர்கள் அல்லது வெளிநபர்கள் யாராவது வீட்டுக்குள் புகுந்து நைசாக நகைகளை திருடிச்சென்றனரா? என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story