சத்திரக்குடி அருகே பாலம் இடிந்து போக்குவரத்து பாதிப்பு


சத்திரக்குடி அருகே பாலம் இடிந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2018 3:45 AM IST (Updated: 9 Nov 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

சத்திரக்குடி அருகே பாலம் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போகலூர்,

பரமக்குடி தாலுகா போகலூர் யூனியன் சத்திரக்குடி அருகே உள்ள பூவிளத்தூர் மற்றும் குமுக்கோட்டை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் தங்களின் அன்றாட தேவைக்கு பொருட்கள் வாங்க சத்திரக்குடி மற்றும் பரமக்குடிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதிக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story