மாவட்ட செய்திகள்

திருவாரூரில் தகராறை தடுக்க முயன்றவர் அரிவாளால் வெட்டிக்கொலை + "||" + One who tried to stop the dispute in Thiruvarur was chopped with scythe

திருவாரூரில் தகராறை தடுக்க முயன்றவர் அரிவாளால் வெட்டிக்கொலை

திருவாரூரில் தகராறை தடுக்க முயன்றவர் அரிவாளால் வெட்டிக்கொலை
திருவாரூரில், தகராறை தடுக்க முயன்றவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர்,

திருவாரூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜயோகியம். இவருடைய மகன் தங்கபாண்டி(வயது 31). திருவாரூர் நெய்விளக்கு தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்து என்கிற மணிமாறன்(34). இவர்கள் இருவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு சமரசம் செய்யப்பட்டது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிமாறன் நெய்விளக்கு தோப்பு ஆற்றுப்பாலம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த தங்கபாண்டி, உன்னை இத்தனை நாள் விட்டு வைத்ததே தப்பு என தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிமாறனை வெட்ட முயன்றார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நெய்விளக்கு தோப்பு தெருவை சேர்ந்த மணி மகன் பால்பாண்டி(31), மச்சக்காளை மகன் பிரபாகரன்(27), தமிழ்செல்வன் மகன் பிரகாஷ்(22), கிருஷ்ணன் மகன் ரவி(33) ஆகிய 4 பேரும், தங்கபாண்டியை தடுக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தங்கபாண்டி, பால்பாண்டியின் நெஞ்சு பகுதியில் வெட்டினார். மேலும் அவர்கள் அனைவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பால்பாண்டியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பால்பாண்டிக்கு சித்ரா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காரை மறித்து வக்கீல் வெட்டிக்கொலை; அண்ணன் உள்பட 2 பேர் படுகாயம் மர்ம கும்பல் வெறிச்செயல்
மணப்பாறை அருகே பட்டப்பகலில் மர்ம கும்பல் காரை வழிமறித்து அதில் இருந்த வக்கீலை வெட்டிக்கொலை செய்தது. மேலும் அவருடன் சென்ற அண்ணன் உள்பட 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
2. முத்துப்பேட்டையில் முதியவர், கோடரியால் வெட்டிக்கொலை திருமணம் செய்து வைக்காததால் மகன் வெறிச்செயல்
திருமணம் செய்து வைக்காததால் முதியவரை கோடரியால் வெட்டிக்கொன்ற அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
3. செய்யூர் அருகே மீனவர் வெட்டிக்கொலை 6 பேர் கைது
செய்யூர் அருகே மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. வாலிபர் கொலை வழக்கில் அ.தி.மு.க.-தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 4 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கில் அ.தி.மு.க.- தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்
சேதுபாவாசத்திரம் அருகே தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை காரில் வந்த மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது.