கூடுதல் பொறுப்பு கணக்குகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்


கூடுதல் பொறுப்பு கணக்குகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 4:15 AM IST (Updated: 9 Nov 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களின் கணக்குகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்.

பேராவூரணி,

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும். தற்போதைய தேவைக்கேற்ப சரியான கணினி வழங்க வேண்டும். இணைய வசதி, மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று கூடுதல் பொறுப்பு வகிக்கும் குருவிக்கரம்பை, ரெகுநாதபுரம், கைவினவயல், கழனிவாசல், சேதுபாவாசத்திரம், பெரியநாயகிபுரம், மாவடுகுறிச்சி, அரசலங்கரம்பை, ரெட்டவயல், சொர்ணக்காடு, பின்னவாசல், பெருமகளூர் வடபாதி, விளங்குளம், கொளக்குடி, திருவத்தேவன் உள்ளிட்ட கிராமங்களுக்கான கணக்குகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத்தலைவர் ரத்தினவேல், செயலாளர் சக்திவேல், பொருளாளர் மருததுரை மற்றும் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 12-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story